பணி: இன்ஜினியர் (கான்டிராக்ட்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ்): 25 இடங்கள்.
வயது: 32க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.50,000- ரூ.1,60,000.
தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/மெக்கானிக்கல்/புரடக்சன்/ கன்ட்ரோல் ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். பவர் செக்டார்/ஆயில்/கேஸ்/ஸ்டீல் தொழிற்சாலைகளில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் மட்டும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் நிரந்தரமாக பணி அமர்த்தப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, இடம் ஆகிய விவரங்கள் இ.மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
கட்டணம்: பொது/ஓபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.ntps.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:25.05.2026.


