Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓபென் ரோர் இவோ

ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம், ரோர் இவிஓ என்ற எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 9 கிலோ வாட் எலெக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றுள்ளது. 40 கிலோ மீட்டர் வேகத்தை 3 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது. இந்த பைக்கில் 3.5 கிலோவாட் அவர் எல்எப்பி பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. அதிவேக சார்ஜர் மூலம் 90 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்யலாம். அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த பைக்கில் 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. புளூடூத் மூலம் ஸ்மார்ட் போனை இணைத்துக் கொள்ளலாம். நேவிகேஷன், ரைடிங் தொடர்பான புள்ளி விவரங்கள், போன் அழைப்புகள், குறுந்தகவல்களை பார்த்துக் கொள்ளலாம். பிரேக்கிங் அசிஸ்ட், டிரைவர் அலர்ட் சிஸ்டம், ஜியோ பென்சிங் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பல்ஸ் ரெட், நியூட்ரான் புளூ, மேக்னடிக் பிளாக், போட்டான் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலை சுமார் ரூ.1.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் 10,000 வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் விலையில் பெறலாம். ரூ.777 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவர்களுக்கு ஜூன் மாதம் பைக் டெலிவரி செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.