ஊட்டி பைன் பாரஸ்ட் காண குவியும் சுற்றுலா பயணிகள்
ஊட்டி: ஊட்டி அருகே உள்ள பைன் பாரஸ்ட் சுற்றுலா தலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் நாள்தோறும் குவிகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தலை குந்தா அருகே பைன் பாரஸ்ட் சுற்றுலா தலம் உள்ளது. இங்கு ஏராளமான பைன் மரங்களுக்கு இடையே அழகிய நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக சென்றால் இயற்கை எழில் கொஞ்சும் காட்சியை ரசித்தபடியே காமராஜ் சாகர் அணையை அடையலாம்.
இந்த அழகை காண்பதற்காக கூடலூர் வழியாக ஊட்டி வரும் கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் இந்த பைன் பாரஸ்ட் பகுதியில் குவிந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பது மட்டுமின்றி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். பொதுவாக வார விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. ஆனால், தற்போது வர நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில் இதுபோன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.