Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆன்லைன் சூதாட்டம்: ஈடி அதிரடி சோதனை

மும்பை: ஆன்லைன் சூதாட்ட நிறுவனமான பரிமேட்ச் உள்ளிட்டவற்றின் பணமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை புதன்கிழமை 4 மாநிலங்களில் பல இடங்களில் சோதனை நடத்தியது. மகாராஷ்டிரத்தில் 5 இடங்கள், டெல்லியில் 4 இடங்கள், ராஜஸ்தானில் 2 இடங்கள், குஜராத்தில் ஓரிடத்தில் சோதனை நடத்தப்பட்டது. பரிமேட்ச் நிறுவனத்தின் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் கிடைத்த பணத்தை, ஆடிட்டர்கள் மற்றும் நிறுவனச் செயலர்கள் உதவியுடன் பணமாக மாற்றி,

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும், பணம் செலுத்தும் இணையவழிகள் மூலம் போலியான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டம் மூலம் பயனர்களை ஏமாற்றியதாக மும்பை சைபர் போலீஸார் பதிவு செய்த எப்.ஐ.ஆர். அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.