Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆன்லைன் விளையாட்டுக்கு பெற்றோர் எதிர்ப்பு: 3 சிறுமிகள் தற்கொலை

காஜியாபாத்: உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், ஆன்லைன் விளையாட்டுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று அதிகாலை மூன்று சிறுமிகள் தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அந்தச் சிறுமிகள் பாக்கி (12), பிராச்சி (14), மற்றும் விஷிகா (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூவரும் சகோதரிகள் ஆவர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் 'கொரியன் லவ் கேம்' என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடிவந்துள்ளனர். அந்த ஆண்லைன் விளையாட்டுக்கு அடிமையாக இருந்த அவர்கள் அந்த அளவுக்கு, வேறு எதையும் செய்வதில்லை. இதன் காரணமாக அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், இன்று அதிகாலை 2.15 மணியளவில் 3 சகோதரிகளும் தங்கள் வீட்டின் பால்கனியில் இருந்து கைகளைப் பிடித்துக் கொண்டு குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இதனை அடுத்து சிறுமிகள் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. அதில் தங்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு, தங்கள் விளையாட்டு நடவடிக்கைகளை விவரித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, அப்பா, நாங்கள் கொரிய மொழியை விட்டு வெளியேற முடியாது. கொரியன் மொழிதான் எங்கள் வாழ்க்கை. கொரியன் மொழிதான் எங்களுக்கு எல்லாமே. அதிலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது. நாங்கள் எங்கள் உயிரையே விட்டுவிடுவோம் என கூறியதாக அந்த சிறுமிகளின் தந்தை கூறினார்.