ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்
Advertisement
கடந்த வருடம் இதே நாட்களில் ரூ.809.25 கோடிக்கு விற்பனை நடந்தது. ஓணம் பண்டிகையின் முந்தைய நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளன. இது அரசு மதுபானக் கடைகள் மூலம் நடந்த விற்பனையின் கணக்கு மட்டுமே ஆகும். இது தவிர பார்கள், ராணுவம் மற்றும் போலீஸ் கேன்டீன்களில் நடந்த விற்பனை மற்றும் கள்ளுக்கடைகளில் கடந்த விற்பனையையும் சேர்த்தால் தொகை மேலும் அதிகரிக்கும்.
Advertisement