Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிறைக்கு செல்லும் போது மோசமான நோய் வெளியே வந்தால் சுகபோக வாழ்க்கையா..? கேரள மாஜி டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்: கேரள காவல்துறையில் டிஜிபியாக இருந்து கடந்த 3 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர் டோமின் தச்சங்கரி. இடுக்கி, எர்ணாகுளம், கண்ணூர் மாவட்ட எஸ்பி, எர்ணாகுளம் குற்றப்பிரிவு டிஐஜி, கண்ணூர் சரக ஐஜி, குற்ற ஆவண காப்பகப்பிரிவு கூடுதல் டிஜிபி, சிறைத்துறை தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை இவர் வகித்துள்ளார்.

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரில் கடந்த 2007ம் ஆண்டு டோமின் தச்சங்கரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த கோட்டயம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம், கடந்த இரு மாதங்களுக்கு முன் இவருக்கு 4 வருடம் சிறைத்தண்டனையும், ரூ. 30.84 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு கடுமையான நோய்கள் இருப்பதாக கூறியதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் கேரள உயர்நீதிமன்றம், டோமின் தச்சங்கரிக்கு ஜாமீன் வழங்கியது.

வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பன உட்பட நிபந்தனைகளின் பேரில் தான் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் துபாயில், தான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிவதாகவும், அங்கு பணிக்கு செல்ல ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கூறி டோமின் தச்சங்கரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதி பதருதீன், தச்சங்கரிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிபதி கூறியது: சிறையில் அடைத்த போது தனக்கு மோசமான நோய்கள் இருப்பதாக கூறி மருத்துவமனையில் சேர்ந்த நபர் தான் இவர்.

நோயாளியான இவர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் எப்படி வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முடியும்? இது முரண்பாடாக இருக்கிறது. சிறைக்கு செல்லும் போது மோசமான நோய் இருப்பதாக கூறும் சிலர் வெளியே வந்தவுடன் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர் எனக்கூறிய நீதிபதி பதருதீன், டோமின் தச்சங்கரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.