டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமதுவின் வீடு இடித்துத் தள்ளபட்டதாக தகவல்
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமதுவின் வீடு பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தள்ளபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10ம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில், அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து 13 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்தவர், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் முகமது உமர் நபி (28) ஆவார்.
Advertisement