புதுடெல்லி: ஓமனின் லிமா பகுதிக்கு அருகே வணிகக் கப்பல் ஒன்றின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பலியாகி உள்ளார். எம்எஸ்வி அல் ஜுசுபி என்ற அந்த கப்பலில் இருந்து 13 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வணிக கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மிகவும் கவலைக்குரியவை. அங்கு நிலவும் பதற்றத்தை உடனடியாகத் தணிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளது.


