Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ்

ஓலா நிறுவனம், எஸ்1 எக்ஸ் பிளஸ் என்ற புதிய வேரியண்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்டில் 5.2 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. எஸ்1 எக்ஸ் வேரியண்ட்டுக்கு அடுத்த டாப் வேரியண்டாக இது இருக்கும். இதில் 11 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் இடம் பெற்றிருக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். 40 கிலோ மீட்டர் வேகத்தை 3 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரேக் பை வயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இதில், முன்புறம் டிஸ்க் பிரேக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், 4.3 அங்குல எல்சிடி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. அறிமுகச் சலுகையுடன் ஷோரூம் விலை சுமார் ரூ.1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.