பணியிடங்கள் விவரம்:
1. ஆபீசர்ஸ் கிரேடு-பி (டிஆர்)- ஜெனரல்: 40 இடங்கள் (பொது-16, பொருளாதார பிற்பட்டோர்-4, ஒபிசி-9, எஸ்சி-7, எஸ்டி-4). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. ஆபீசர்ஸ் (கிரேடு பி (டிஆர்)- டிஇபிஆர்): 10 இடங்கள். (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-3, எஸ்டி-1). தகுதி: பொருளியல்/ நிதி/ வணிக பொருளியல்/ வேளாண்மை பொருளியல்/ தொழில் பொருளியல்/சர்வதேச நிதி/ குவாண்டிடேட்டிவ் டெக்னிக்ஸ்/பேங்கிங் மற்றும் டிரேடு பைனான்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. ஆபீசர்ஸ் (கிரேடு- பி (டிஆர்)- டிஎஸ்ஐஎம்: 10 இடங்கள். (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-1). இவற்றில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: புள்ளியியல்/கணித புள்ளியியல்/கணித பொருளியல்/ எக்னோமெட்ரிக்ஸ்/புள்ளியியல் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ்/ அப்ளைடு ஸ்டேடிடிக்ஸ் மற்றும் தகவலியல் ஆகிய ஏதாவதொன்றில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு: 01.04.2026 தேதியின்படி 21 லிருந்து 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ஒபிசியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் முதற்கட்ட தேர்வும், 25,26 ஆகிய தேதிகளில் 2ம் கட்டத் தேர்வும் நடைபெறும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.850 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100 மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டி. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (20.05.2026).


