Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அக்டோபர் மாதத்தில் 1.08 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1,08,23,408 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 16.10.2026 அன்று 4,51,705 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் 10,240,136 பயணிகளும், 14.64 கி.மீ நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் சந்திப்பு வழியாக வடபழனி மெட்ரோ நிலையம் வரை செல்லும் 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் 5,83,272 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2026, அக்டோபர் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,05,718 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code)

(Single Journey Paper QR 22,52,397; ONDC - 13,95,128; Whatsapp 4,74,602; Chennai One App 4,26,780; Paytm 3,35,336; PhonePe - 1,76,364; Static QR 2,20,624; Online QR-2,02,664; CMRL Mobile App (SVP) 1,33,795) பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.