தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்பியதால் ஆத்திரம்; மனைவியின் முன்னாள் காதலனை வெட்டி கொன்று வீட்டருகே புதைப்பு: புதுமாப்பிள்ளை கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்தன் (22). கூலித்தொழிலாளி. இவரும், சிறுமலையில் உள்ள கடமான்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் பேசி பழகி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனால் பெண்ணின் பெற்றோர் இருவரையும் கண்டித்ததோடு, மகளுக்கும், அய்யலூர் பகுதியை சேர்ந்த வீரமணி(24) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இருவரும் சிறுமலையில் வசித்து வந்தனர்.

Advertisement

திருமணத்திற்கு பின்னும் பெண்ணின் செல்போனுக்கு, அரவிந்தன் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியும், பேசியும் வந்துள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திருமணமாகி விட்டதால், இனிமேல் தனது செல்போனுக்கு எந்தவிதமான எஸ்எம்எஸ்சும் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கணவர் வீரமணியிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அரவிந்தன் எஸ்எம்எஸ் அனுப்பியபடி இருந்துள்ளார். இதனால் தனது மனைவி செல்போன் மூலமாகவே சிறுமலைக்கு வருமாறு அரவிந்தனுக்கு வீரமணி எஸ்எம்எஸ் அனுப்பினார். அதன்படி கடந்த 14ம் தேதி அரவிந்தன் சிறுமலையில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீரமணி அவரிடம் தகராறு செய்து, ‘‘என் மனைவிக்கு எஸ்எம்எஸ் மற்றும் போன் செய்து ஏன் தொல்லை கொடுக்கிறாய்’’ என கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த வீரமணி அரிவாளால் அரவிந்தனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வீட்டின் அருகிலேயே சிறிய அளவிலான பள்ளத்தை தோண்டி அரவிந்தனின் உடலை புதைத்தார். மேலும் அதன் மீது குப்பைகளை கொட்டி யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார். இதுகுறித்து வீரமணி நேற்று முன்தினம் தனது நண்பரிடம் கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் ஊரிலுள்ள முக்கிய நபர்களிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த தகவலின்பேரில் நேற்று அதிகாலை சம்பவ இடத்துக்கு விரைந்த திண்டுக்கல் புறநகர் போலீசார் கொலை செய்யப்பட்ட அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வீரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement