ஊட்டசத்து திட்டத்திற்கான நிதியுதவி நிறுத்தம் அமெரிக்கா உச்சநீதிமன்ற உத்தரவால் 4.2 கோடி பேருக்கு பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்க வரலாற்றில் இல்லாத அளவு 40 நாட்களுக்கும் மேலாக நிதி முடக்க நிலை ஏற்பட்டுள்ளது. ஊதியம் கிடைக்காததால், ஊழியர்கள் பலர் கட்டாய விடுப்பில் சென்றுள்ளனர். ஆள் பற்றாக்குறை காரணமாக முக்கிய துறைகளின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க மக்களுக்கு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியுதவியை முற்றிலும் நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள 4.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்புக்கு முன்னர் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் சில மாகாணங்களில்பலர் நிதியுதவியை பெற்று வந்தனர். தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அது முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. மீண்டும் ஊட்டசத்துக்கான நிதியுதவி எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.
Advertisement
Advertisement