Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அணுமின்கழக மருத்துவமனையில் நர்ஸ், பார்மசிஸ்ட்கள் வேலை

பணி: 1. நர்ஸ்-ஏ. 11 இடங்கள். சம்பளம்: ரூ.44,900. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிஎன்எம் படிப்பு அல்லது பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

2. சயின்டிபிக் அசிஸ்டென்ட்- பி (ரேடியோகிராபர்): 1 இடம். சம்பளம்: ரூ.35,400. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பிஎஸ்சி ரேடியோகிராபி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிஎஸ்சி படிப்புடன் ஒரு வருட ரேடியோகிராபி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

3. எக்ஸ்ரே டெக்னீசியன்: 1 இடம். சம்பளம்: ரூ.21,700. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு வருட எக்ஸ்ரே டெக்னீசியன்/மெடிக்கல் ரேடியோகிராபர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

4. சயின்டிபிக் அசிஸ்டென்ட்- பி (பேத்தாலஜி டெக்னீசியன்): 1 இடம். சம்பளம்: ரூ.35,400. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: பிஎஸ்சி எம்எல்டி படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிஎஸ்சி படிப்புடன் டிஎம்எல்டி படித்திருக்க வேண்டும்.

5. பார்மசிஸ்ட்- பி: 1 இடம். சம்பளம்: ரூ.29,200. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் டி.பார்ம் படிப்பை முடித்து 3 மாத பார்மசி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.படிப்புகள், தொழில்நுட்ப படிப்புகள் அனைத்தும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றதாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.

கட்டணம்: பார்மசிஸ்ட், எக்ஸ்ரே டெக்னீசியன் பணிக்கு ரூ.100/. சயின்டிபிக் அசிஸ்டென்ட், நர்ஸ் பணிக்கு ரூ.150/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

எழுத்துத் தேர்வு,தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, குவாண்டிடேட்டிவ் அப்டிடியூட் மற்றும் தொழிற்பாடப் பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.

www.nfc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.04.2026.