Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார் பிரக்ஞானந்தா!

நார்வே செஸ் (Norway Chess) பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா படைத்தார். ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை (Vincent Keymer) தோற்கடித்து, தனது தொடரை ஒரு மறக்கமுடியாத வெற்றியோடு நிறைவு செய்தார் ஆர். பிரக்ஞானந்தா.

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள 6 வீரர், வீராங்கனைகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். 9-வது சுற்று முடிவில் பிரக்ஞானந்தா 15 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருந்தார்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற 10வது மற்றும் கடைசி சுற்றில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை தோற்கடித்தார். இதன்மூலம் நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை கிராண்ட்மாஸ்டர் படைத்தார்.

ஏற்கனவே, ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை 2 முறை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்தின் 19 ஆண்டுகால சாதனையையும் பிரக்ஞானந்தா சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.