Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடமாவட்டத்துல 3 சீட்டு கேட்டு குக்கர் பிரஷர்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகள் சீட் கேட்டு கொடி பிடிக்கும் நிகழ்வுகள் தொடங்கியுள்ளது. என்டிஏவில் அதிமுக தலைமை வகிக்கும் கூட்டணியில், டிடிவி தினகரன் இணைந்துள்ளார். அவருக்கு 10க்கும் மேற்பட்ட சீட்டுகள் ஒதுக்கப்பட்டு, ராஜ்சபாவிலும் ஒரு சீட்டு ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில், அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால், திருப்பத்தூருக்கான சீட்டு பாமகவுக்கு போய்விடுமா? என்ற கேள்வி இருந்தது.

தற்போது அடுத்த அடியாக அமமுகவும் கூட்டணியில் இணைந்ததால், அதிமுகவினருக்கு மிகப்பெரிய இடியாக மாறியுள்ளதாம். இதனால், திருப்பத்தூருக்கு அமமுகவில் எம்எல்ஏ, எம்பி தேர்தலுக்கு போட்டிபோட்ட, ஏ.ஞானசேகரனுக்கு சீட்டு ஒதுக்கியே ஆக வேண்டும்னு டிடிவியே குரல் கொடுக்குறாராம். வடமாவட்டத்துல சோளிங்கர் தொகுதி என்.ஜி.பார்த்திபனுக்கும், வந்தவாசி தொகுதியில வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் டிடிவி சீட்டு கேட்குறாராம். டிடிவி கூட கூட்டணி வெச்சாலும், வெச்சாங்க. தொகுதியில சீட்டு நமக்கு கிடைக்குமா? கிடைக்காதான்னு தெரியலையேன்னு இலை கட்சிக்காரங்க புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களாம்.