பணியிடங்கள் விவரம்:
அ. துணை பதிவாளர்: 1 இடம் (பொது). வயது: 50க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் மற்றும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆ. உதவி பதிவாளர்: 1 இடம் (பொது). வயது: 40க்குள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இ. பிரிவு அலுவலர்: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஈ. ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் அலுவலர்: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: புள்ளியியல்/கணிதம்/பயன்பாட்டு புள்ளியியல் ஆகிய பாடங்களில் முதுகலைப்பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உ. அசிஸ்டென்ட் புரோகிராமர்: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்., அல்லது எம்சிஏ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊ. உதவியாளர்: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் மற்றும் டைப்பிங், கம்ப்யூட்டர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எ. தனி உதவியாளர்: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் எழுதவும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
ஏ. லேபரட்டரி உதவியாளர்: 1 இடம் (பொது). வயது: 32க்குள். தகுதி: கல்வி/ உளவியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் அறிவும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
ஐ. ஸ்டெனோகிராபர்: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 32க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவும், நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதவும் ெதரிந்திருக்க வேண்டும்.
ஒ. ேலாயர் டிவிஷன் கிளார்க்: 7 இடங்கள் ( பொது-4, எஸ்டி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 32க்குள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள் அல்லது இந்தி 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
ஓ. ஸ்டாப் கார் டிரைவர்: 1 இடம் (பொது). வயது: 32க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக/கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத்திறனும், 5 வருட டிரைவர் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
ஔ. பம்ப் ஆபரேட்டர்: 1 இடம் (பொது). வயது: 32க்குள். தகுதி: எலக்ட்ரீசியன்/வயர்மேன்/பிட்டர்/ பார்ம் எக்யூப்மென்ட் ஆபரேட்டர் பிரிவில் டிரேடு சான்றிதழும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
க. நூலக உதவியாளர்: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 32க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவும், நூலக அறிவியலில் சான்றிதழ் மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ங. பல்நோக்கு பணியாளர்: 8 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-3) தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ச. லேபரட்டரி அட்டெண்டென்ட்: 1 இடம் (மாற்றுத்திறனாளி): வயது: 32க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, திறன்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பணி எண் 1 மற்றும் 2க்கு பொதுப்பிரிவினருக்கு ரூ.2,000/-. எஸ்சி/எஸ்டி/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் மற்றும் பெண்களுக்கு ரூ.1,000. பணி எண்: 3 லிருந்து 15 வரைக்கும் பொதுப்பிரிவினருக்கு ரூ.1,000/-. எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.slbsrsv.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.05.2026.
