பொதுத்துறை நிறுவனமான மெக்கான் லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாகம் அல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. அக்கவுன்டென்ட்: 14 இடங்கள். தகுதி: சிஏ/சிஎம்ஏ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. அசிஸ்டென்ட்: (மனிதவளம்): 2 இடங்கள். தகுதி: வணிக நிர்வாகம் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
3. அசிஸ்டென்ட் (நிர்வாகம்): 2 இடங்கள். தகுதி: வணிக நிர்வாகம் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
4. அசிஸ்டென்ட் (செக்ரட்டரியேட் சர்வீஸ்): 6 இடங்கள். தகுதி: வணிக நிர்வாகம் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான
வயது: 28க்குள்.
சம்பளம்: ரூ.27,710- ரூ.53,590.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் பிரிவினருக்கு ரூ.875/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.625/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.meconlimited.co.in-carrers-carrer opportunities என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (06.05.2026).



