தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

'நிபந்தனையற்ற சரணாகதி' அடைவதைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் எட்டப்படாது: டொனால்ட் ட்ரம்ப்!

 

Advertisement

வாஷிங்டன்: நிபந்தனையற்ற சரணாகதி' அடைவதைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் எட்டப்படாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஈரானும் ஆவேசமாக பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி அசரடித்து வரும் அந்த நாடு. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் நீடித்து வரும் இந்த போர் இன்று 7 வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பும் எவ்வித இடைவெளியும் இல்லாமல் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நிபந்தனையற்ற சரணாகதி' அடைவதைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் எட்டப்படாது. மேலும் "சரணடைந்தப் பிறகு, ஈரானுக்கு ஒரு சிறந்த தலைவரை தேர்வு செய்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம். ஈரானின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பணியாற்றுவோம்” எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Advertisement