மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காக 2 அமெரிக்க மருத்துவ பேராசிரியர்களுக்கு நோபல் பரிசு
Advertisement
பரிசு வென்றவர்களுக்கு தங்க பதக்கத்துடன் 10 லட்சம் டாலர் (ரூ.8.39 கோடி)பரிசு தொகை வழங்கப்படுகிறது. கடந்த 1901 ம் ஆண்டிலிருந்து நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை கவுரவிக்கும் வகையில் ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ம் தேதி இந்த பரிசு வழங்கப்படும். இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்றும்,வேதியலுக்கான நோபல் நாளையும், இலக்கியத்தில் சாதனை படைத்தவர்களுக்கான விருது நாளை மறுநாளும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு 11ம் தேதி அறிவிக்கப்படும்.
Advertisement