பணி: சுகாதார ஆய்வாளர்: 16 இடங்கள் (பொது-7, பொருளாதார பி்ற்பட்டோர்-1, ஒபிசி-5, எஸ்சி-3).
சம்பளம்: ரூ.38,000. வயது: 01.02.2026 தேதியின்படி 30க்குள்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சேனிட்டரி இன்ஸ்பெக்டர்/ஹெல்த் இன்ஸ்பெக்டர் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் பிரிவினருக்கு ரூ.450/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, லாஜிக்கல் ரீசனிங், நியூமரிக்கல் ஏபிலிட்டி மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
https://www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.04.2026.
