பணியிடங்கள் விவரம்:
1. பார்மசிஸ்ட்- குரூப் பி: 15 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2). சம்பளம்: ரூ.22,000- ரூ.90,000. வயது: 30க்குள். தகுதி: பார்மசி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
2. ஆப்தலமிக் டெக்னீசியன்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.23,000- ரூ.95,000. வயது: 30க்குள். தகுதி: ஆப்டோமெட்ரியில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. தியேட்டர் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.20,000- ரூ.81,000. வயது: 30க்குள். தகுதி: ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீஸியா டெக்னாலஜி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. ஆடியாலஜிஸ்ட் மற்றும் ஸ்பீச் தெரபிஸ்ட்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.24,000- ரூ.1,00,000. வயது: 30க்குள். தகுதி: ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேதாலஜி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. டென்டல் மெக்கானிக்: 1 இடம். சம்பளம்: ரூ.22,000- ரூ.90,000. வயது: 30க்குள். தகுதி: டென்டல் லேப் டெக்னாலஜியில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசியினருக்கு ரூ.486/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.236/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2026.


