Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நெய்வேலி நிலக்கரி கழகத்தில் வேலை

கடலூர் மாவட்டம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள ஜூனியர் ஓவர்மேன்/மைனிங் சிர்தார் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. ஜூனியர் ஓவர்மேன் (டிரெய்னி): 3 இடங்கள். சம்பளம்: ரூ.31,000- ரூ.1,00,000. தகுதி: மைனிங்/ மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ்சால் அங்கீகரிக்கப்பட்ட ஓவர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட படிப்புக்கு இணையான படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பானது ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையத்தில் பெற்றதாக இருக்க வேண்டும்.

வயது: பொதுப் பிரிவினர் 30 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 33 வயதிற்குள்ளும், எஸ்சி/எஸ்டி யினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

2. மைனிங் சிர்தார் (செலக்‌சன் கிரேடு-1): 5 இடங்கள். சம்பளம்: ரூ.26,000- ரூ.1,10,000. தகுதி: மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ அல்லது ஏதாவதொரு பி.இ.,/பி.டெக்., படிப்பை மைனிங் சிர்தார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: பொதுப்பிரிவினர்கள் 30 வயதிற்குள்ளும், ஒபிசியினர் 33 வயதிற்குள்ளும், எஸ்சி/எஸ்டி யினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.கட்டணம்: ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு ரூ.550/-. மைனிங் சிர்தார் பணிக்கு ரூ.450/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் புராசசிங் கட்டணமாக ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு ரூ.250/-, மைனிங் சிர்தார் பணிக்கு ரூ.200 ஐ செலுத்த வேண்டும். இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் குவாண்டிடேட்டிவ் அப்டிடியூட்/ரீசனிங் மற்றும் ஜெனரல் அவர்னெஸ் ஆகிய பிரிவுகளிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2026.