Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இங்கிலாந்துடனான 3வது டெஸ்டில் அசத்தல் தொடரை வென்றது நியூசிலாந்து

நாட்டிங்காம்: இங்கிலாந்து அணியுடன் நடந்த 3வது டெஸ்டில் 160 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 115 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், ஓவல் அரங்கில் நடந்த 2வது டெஸ்டில் நியூசி. 253 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது.

இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 438 ரன்னும், இங்கிலாந்து 354 ரன்னும் குவித்து ஆல் அவுட்டாகின. 84 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசி. 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. டேரில் மிட்செல் 100, ரச்சின் 94 ரன் விளாசினர். இதையடுத்து, 373 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து கடைசி நாளான நேற்று 212 ரன்னுக்கு சுருண்டு 160 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டக்கெட் 36, கேப்டன் ஸ்டோக்ஸ் 30, ஜேமி ஸ்மித் 60 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர்.

நியூசி. பந்துவீச்சில் ஜாக் போல்க்ஸ் 3, நாதன் ஸ்மித், சான்ட்னர் தலா 2, பென் சியர்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். டேரில் மிட்செல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருதை ஆர்ச்சர், நாதன் ஸ்மித் பகிர்ந்துகொண்டனர்.இங்கிலாந்து மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு தொடரை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை நியூசி. வசமாகி உள்ளது.

* விடைபெற்றார் ஸ்டோக்ஸ்

நியூசிலாந்துடன் விளையாடிய 3வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் (35 வயது) ஓய்வு பெற்றுள்ளார். டி20ல் இருந்து 2022லும், ஒருநாள் போட்டிகளில் இருந்து 2023லும் ஓய்வு பெற்றிருந்த ஸ்டோக்ஸ், தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நேற்றுடன் நிறைவு செய்தார்.அவர் 121 டெஸ்டில் 7228 ரன் (அதிகம் 258, சராசரி 34.58, சதம் 14, அரை சதம் 37) மற்றும் 246 விக்கெட் எடுத்து சிறந்த ஆல் ரவுண்டராக முத்திரை பதித்துள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4வது நாளிலேயே அறிவித்து சக வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஸ்டோக்ஸ், சேசிங்கின்போது தொடக்க வீரராகக் களமிறங்கி தேவையில்லாமல் அடித்து ஆடி விக்கெட் தானம் செய்தே தஇங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸி.யிடம் தோற்றது, இரவு விடுதியில் ரகளையில் ஈடுபட்டது ஏற்கனவே சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், தற்போது சுயநலமாக செயல்பட்டு அணியை தோற்கவைத்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.,