Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

19 ஆண்டுக்கு முன் பொள்ளாச்சி வந்த புதிய போப் ஆண்டவர்: சமூக வலைதளங்களில் வைரல்

பொள்ளாச்சி: உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான போப்பிரான்சிஸ் இத்தாலியின் வாடிகன் சிட்டியில் கடந்த மாதம் 24ம் தேதி வயது மூப்பு காரணமாக காலமானார். இதனையடுத்து, அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பீரீ வோஸ்ட் (69) என்பவர் நேற்று முன்தினம் 267வது போப்பாக தேர்வு செய்யப்

பட்டார். இவரது பெயர் லியோ 14 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள போப்ஈண்டவர் லியோ 14 கடந்த 2006-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மீன் கரை ரோடு ஜமீன் ஊத்துக்குளியில் செயல்படும், அகஸ்டினியன் சபையை சேர்ந்த நிர்வாகத்தினரால் நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.

பெரும்பாலான போப்புகளுக்கு இந்தியா பற்றி நன்கு அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போது போப்பாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் லியோ 14 தமிழ்நாட்டை பற்றியும் தமிழர்கள் மற்றும் தமிழர் நாகரிகம் பற்றியும் நன்கு அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் பல்வேறு தரப்பினரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 19 ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியில் உள்ள பள்ளிக்கு வந்த தற்போதைய போப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.