Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதிய பல்சார் என்எஸ்400 இசட்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், புதிய 349 சிசி இன்ஜின் கொண்ட பல்சார் என்எஸ் 400 இசட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது அதிகபட்சமாக 40.6 பிஎஸ் பவரையும், 33.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இன்ஜின் திறன் முந்தையதை விட 2.4 எச்பி பவர் மற்றும் 1.8 என்எம் டார்க் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பல்சார் என்எஸ் 400 இசட் பைக்கின் இன்ஜின் திறன் குறைக்கப்பட்டு, 350 சிசி திறன் பைக் வரிசையில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்எஸ்400 இசட் பைக்கின் ஷோரூம் விலை ரூ.1.94 லட்சம். தற்போது 350 சிசி பைக் திறனுக்குள் கொண்டு வரப்பட்டதால் 18 சதவீத ஜிஎஸ்டி பிரிவுக்குள் இந்த பைக் வந்து விட்டது. இதன் பலனாக இந்த மோட்டார் சைக்கிளின் ஷோரூம் விலை சுமார் ரூ.1.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பைக்கின் விலை சுமார் ரூ.14,000 குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி, இன்சூரன்ஸ் குறைவு மற்றும் பதிவுக் கட்டணமும் குறையும் என்பதால் மொத்தத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.24,500 மிச்சமாகும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரைடு பை வயர் தொழில்நுட்பம், டூயல் சானல் ஏபிஎஸ், குயிக் ஷிப்டர், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரேடியல் டயர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.