புதுடெல்லி: மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள 8 பதவிகளுக்கும், அடுத்த தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை முடிவு செய்யவும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட 3 பேர் கொண்ட குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய தகவல் ஆணையத்தில் தலைவர் பதவியுடன் சேர்த்து மொத்தம் 10 பணியிடங்கள் உள்ளன. தற்போது இரண்டு தகவல் ஆணையர்கள் ஆனந்தி ராமலிங்கம் மற்றும் வினோத் குமார் திவாரி மட்டுமே உள்ளனர். செப்.13 அன்று தலைமை தகவல் ஆணையர் ஹீராலால் சமாரியா பதவி விலகி பிறகு புதிய தலைவர் நியமனம் செய்யப்படவில்லை.
+
Advertisement


