‘தொள்ளாயிரத்து நூத்தி முப்பத்தி மூனா?’ நிதி அமைச்சர் நிர்மலா சொன்ன அடடே கணக்கு: கலாய்க்கும் நெட்டிசன்கள்
கோவை: கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் அந்த தொகுதியில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளனர். தொள்ளாயிரத்து நூத்தி முப்பத்தி மூனு வாக்காளர்கள் போலி முகவரியில் உள்ளனர். ஒரே பெயரில் 3 வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார்கள். 30 வாக்காளர் அட்டைகள் ஒரே முகவரியில் முகவரியில் இருந்துள்ளது. 62 வாக்காளர்கள் வேறொரு முகவரியில் இருந்துள்ளனர். இதை சரிபார்த்த போது 5,964 வாக்காளர்கள் போலியாக இருந்துள்ளனர்’’ எனத் தெரிவித்தார். இந்த பேட்டியில் போலி வாக்காளர்கள் என்று 3 கணக்குகளை நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். அதில், 933 என்பதை தொள்ளாயிரத்து நூத்தி முப்பத்தி மூனு என்று கூறி உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து, ‘ஒரு நாட்டின் நிதியமைச்சருக்கே கணக்கு தெரியவில்லையா? இவர் எப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்? எனகிண்டல் அடித்து வருகின்றனர்.
