நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழ*தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ள நிலையில், 583 வெளிநாட்டினர் உள்பட சுமார் 4,000 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர். இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 26 அன்று நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளதுடன், சித்வான், கிழக்கு மற்றும் மேற்கு நவால்பராசி, நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நுவாகோட், ராசுவா மற்றும் காத்மாண்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நதிகள் பெருக்கெடுத்து ஓடுவதால் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 21,300-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், நீர்மட்டத்தை கண்காணிக்க ராசுவாவில் நேரலை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளத்தால் முக்கிய பாலங்களும் சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டதால், காத்மாண்டுவை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் மாற்று வழிகள் மற்றும் ஒருவழிப் போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.



