Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 162 ஆக அதிகாரிப்பு

காத்மாண்டு: திபெத்தை ஒட்டியுள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நேற்று (26-08-2026) ஏற்பட்ட திடீர் வெள்ளம் கிராமங்களைச் சூறையாடியது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 162-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 142 இந்தியர்கள் மற்றும் 37 வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட சுமார் 403 சுற்றூலாப் பயணிகளை காணவில்லை. இவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமான நடைபெற்றுவருகிறது.

நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவல்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 341 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாள நாட்டினர் உட்பட குறைந்தது 403 காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக இந்தியாவும் மனிதாபிமான உதவியில் இறங்கியது; விமானப்படை 10 டன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு போக்குவரத்து விமானத்தை அனுப்பியது.