Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாள திடீர் வெள்ளம்: 390க்கும் மேற்பட்டோர் உயிரி*ப்பு- 1,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

காத்மாண்டு: திபெத் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களையும் பல திட்டப் பணிக்களங்களையும் அடித்துச் சென்றவாறு, நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 1,400க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 14 ஹெலிகாப்டர்களும் பேரிடர் மீட்புக் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.

கோஷி ஆற்றின் கிளை நதியான லெண்டேவின் நீரோட்டத்தை தடுத்திருந்த பனிப்பாறை சரிந்ததால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இது முதலில் சீனாவுடனான நேபாள எல்லையான ரசுவாகதியிக்கு அருகில் உள்ள திமுரே பகுதியை தாக்கி, ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட பல மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. இமயமலைப் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள டிமுரே (Timure) மற்றும் அருகிலுள்ள சியாப்ருபெசி (Syafrubesi) ஆகிய பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டதாக நேபாள ராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தத் தீவிர வெள்ள பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ரசுவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் நேபாளக் காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 32 நாடுகளைச் சேர்ந்த 624 சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது 78 இந்தியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 392-ஐ எட்டியுள்ளது.