நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரி*ப்பு: 105 இந்தியர்கள் உள்பட 291 வெளிநாட்டவர்கள் சிக்கி தவிப்பு
நேபாளம்: போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 பேர் சிக்கியுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் தொடர் மழையால் நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. குறிப்பாக, நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் திடீரென்று ராட்சத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேக வெடிப்பு காரணமாக இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த வெள்ளப்பெருக்கில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தில் பெருமளவில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. தற்போது இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள் அரசுக்குச் சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகப் (Search and Rescue Operations) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காகத் தற்போது இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்னும் சேதம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத் தற்போது வரை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தாழ்வான மற்றும் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பகுதிகள் முற்றிலுமாக கடும் சேதத்தைச் சந்திக்கின்றன. இதனால், இறப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து சென்ற சூப்பர் யாத்ரா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சையை சேர்ந்த சூப்பர் யாத்ரா நிறுவனம் தமிழகத்தில் இருந்து 59 பேரை 13 நாள் சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் 30 தமிழர்களின் இருப்பிடம் பற்றி தெரியவில்லை. 3 பேருந்துகளில் சென்ற நிலையில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 105 இந்தியர்கள் உள்பட 291 வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ளனர்



