நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகரை சேர்ந்தவர் டேவிட் ராஜ் மகன் சாலமன் சாம் பிரபாகர் (34). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாலமன் சாம் பிரபாகர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்கள் இரண்டு பேர் பைக்கில் வந்தனர். அவர்கள், சாலமன் சாம் பிரபாகரனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திடீரென இரண்டு பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சாலமன் சாம் பிரபாகரனை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாலமன் சாம் பிரபாகர் துடிதுடித்து இறந்தார். பின்னர் பைக்கில் வந்த இருவரும் தப்பி சென்றனர். இக்கொலை சம்பவத்தால் பாளை மனகாவலம்பிள்ளை நகர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


