திருநெல்வேலி மாவட்டம், என்.ஜி.ஓ. காலனியில் தேநீர் கடை நடத்தி வரும் ஜேசன் அவர்களின் மகளான எட்வினா ஜேசன், வி.எம். சத்திரம் ரோஸ்மேரி பப்ளிக் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் எட்வினா ஜெய்சன் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில் இன்று நடைபெற்ற MEDLY RELAY போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணியை இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்து வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.இது இந்த போட்டியில் இவர் வெல்லும் இரண்டாவது வெள்ளி பதக்கம் ஆகும் இதன் மூலம் இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து உள்ளார். சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து தனது கடின உழைப்பால் சர்வதேச மேடையில் முத்திரை பதித்துள்ள எட்வினாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில் இருந்து இப்போட்டில் கலந்து கொண்டு இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே வீராங்கனை என்ற பெருமையையும் சேர்த்துள்ளார். மேலும் தொடர்ந்து ஒலிம்பிக், ஆசியக் போட்டிகள் வரை செல்ல வேண்டும் என்பதே எட்வின் ஜெய்சனின் கனவு.
- கவின்

