Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நெல்லை ரவுடி கொலை வழக்கு- சிறுவன் உட்பட 6 பேர் கைது: தப்பியோட முயன்ற இருவருக்குக் கை முறிவு!

நெல்லை:நெல்லை மாநகரில் இளைஞர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரிடம் இருந்து தப்பியோடிய 2 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர்

நெல்லை மாநகரம், மனக்காவலம் பிள்ளைநகர் பகுதியில் வசித்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலமோன் சாம் பிரபாகர்(32) என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் மாநகர போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி, கொலை வழக்கில் தொடர்புடைய பட்டாணி மாரிமுத்து(32) சுபாஷ்(32) மான் செல்வகுமார்(40) மகாராஜன், லிங்கத்துரை(23) மற்றும் சிறுவன் ஒருவர் என 6 பேரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

இதில் கைதின்போது தப்பியோடியதில் லிங்கத்துரை, மகாராஜன் ஆகியோர் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டனர். எனவே இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.