நெல்லை: நெல்லையில் நடைபெற்ற கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2022ல் சாமிதுரை என்பவரை கொன்ற வழக்கில் 11 பேரையும் நெல்லை நீதிமன்றம் விடுவித்தது. கொலை செய்யப்பட்ட சாமிதுரையின் தாய் முத்து, தந்தை சுந்தரபாண்டி அரசு தரப்பு சாட்சிகளாக ஆஜராகி சாட்சியமளித்தனர். குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
+
Advertisement


