Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க குழுவினர் கத்தார் வந்தடைந்தனர்: நேரடியாக பேச ஈரான் மறுப்பு

துபாய்: அமெரிக்கா-ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த 60 நாட்களில் இறுதி ஒப்பந்தம் எட்ட பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹார்முஸ் ஜலசந்தியில் கத்தார் எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கியதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பக்ரைன், குவைத்தில் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை வீசியது.

இந்நிலையில் திட்டமிட்டபடி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க தூதுக்குழுவின் ஸ்டீப் விட்காப் மற்றுமு் டிரம்ப் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் நேற்று கத்தார் தலைநகர் தோகாவுக்கு வந்தடைந்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை அமெரிக்கா-ஈரான் இடையே நேரடியாக நடக்காது என கூறி உள்ள கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மஜித் அல் அன்சாரி, மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான், கத்தார் இணைந்து இருதரப்பின் கருத்துக்களை பரிமாறும் என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பகாயி, ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் அமெரிக்கா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் கத்தார் அதிகாரிகளுடன் பேச மட்டுமே ஈரான் குழு தோகா வருவதாக தெரிவித்தார். இப்போதைக்கு அமெரிக்க குழுவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் இல்லை தெரிவித்துள்ளார்.