Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீட் விவகாரத்தில் மாணவர்கள் மீதான எப்.ஐ.ஆர்களை அரசியலமைப்பின் 142 பிரிவை பயன்படுத்தி ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு

புதுடெல்லி: கடந்த ஜூலை மாதம் நீட் வினாத்தாள் கசிவுகளுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் எப்.ஐ.ஆர் பதிவாகியுள்ளன. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,‘‘மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட மற்றும் குற்றப் பின்னணி இல்லாதவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் ஒரு முறையீட்டை முன்வைத்தார்.

அதில்,‘‘மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உரித்தான சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து எப்.ஐ.ஆர்-களையும் ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து அவசர மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், இக்கோரிக்கை தொடர்பான மனுவை நாளை(இன்று) விசாரணைக்குப் பட்டியலிட ஒப்புதல் அளித்தார்.