Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

6 நாள்கள், 1,000க்கும் மேற்பட்ட மையங்களில் 2027ம் ஆண்டு நீட் தேர்வு கணினி வழியில் நடத்தப்படும்

புதுடெல்லி: 2027ம் ஆண்டு இளநிலை நீட் தேர்வு கணினி வாயிலாக 6 நாள்களுக்கு, 1,000க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்படும் என தகவல் வௌியாகி உள்ளது. நாடு முழுவதும் நடப்பாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்தப்பட்டது. 5,432 மையங்களில் நடந்த இந்த நீட் தேர்வை 22.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததையடுத்து, 3ம் தேதி நடந்த தேர்வை ரத்து தேசிய தேர்வு முகமை ரத்து செய்ததுடன், கடந்த ஜூன் 21ம் தேதி இளநிலை நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இந்த சூழலில் 2027ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கணினி வாயிலாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்புக்கான மொத்த இடங்களில் சுமார் 56,000 இடங்கள் அரசு மருத்துவ கல்லூரிகளிலும், 52,000 இடங்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் உள்ளன. பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த மருத்துவம் ஆகிய இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் இந்த நீட் தேர்வு முடிவுகளே பயன்படுத்தப்படுகின்றன.

நீட் தேர்வை கணினி முறைக்கு மாற்றுவது குறித்து ஏற்கனவே பலமுறை ஆலோசிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வினாத்தாள் கசிவு சர்ச்சையால் சீர்திருத்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, சுமார் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் கணினி மூலம், 6 நாள்களுக்கு 1,000க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” தகவல்கள் வௌியாகி உள்ளன.