Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஒன்றிய அரசு குழுவிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், என்று ஒன்றிய அரசு குழுவிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார். முதல்வர் விஜய்யை நேற்று தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்மட்ட பணிக்குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி, உறுப்பினர்கள் பேராசிரியர் வி.காமகோடி, அனிதா கர்வால், சங்கர் மருவாடா ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, உயர்கல்வி சேர்க்கைக்காக நடைபெறும் நீட் அல்லது நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, 12ம் வகுப்பு மதிப்பெண்களையே சேர்க்கைக்கான அடிப்படையாக கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி நீட் தேர்விற்கு எதிராக சட்டமன்ற பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், மருத்துவப் படிப்புகள் மற்றும் பிற உயர்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட் மற்றும் நீட் போன்ற தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துரைக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உட உடனிருந்தனர்.