Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கத்தியால் கழுத்து அறுத்து பெண் போலீஸ் தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

நாகர்கோவில்: பெண் போலீஸ் தனது வீட்டில் கழுத்து அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் வயன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பர் ரெஸ்டின். இவரது மனைவி மினி (41). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். மினி, கடந்த 2003ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த மினி, கடந்த 14.3.2021 முதல் பணிக்கு வர வில்லை. அவர் ஆப்சென்ட் பட்டியலில் இருந்தார். பணிக்கு வராமல் இருந்ததற்கான முறையான தகவலும் முறையாக தெரிவிக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (23ம்தேதி) காலை 7 மணியளவில், வயன்கரையில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மினி இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் களியக்காவிளை போலீசார் சென்று, மினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன நிலை பாதிக்கப்பட்டு மினி சிகிச்சை பெற்று வந்ததாகவும், இது தொடர்பாக மன அழுத்தத்தில் அவர் தனக்கு தானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.