புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) எம்பிக்களின் ‘மங்கள் மிலன்’ கூட்டத்தை, திரிணமுல் காங்கிரசிலிருந்து பிரிந்து என்.சி.பி.ஐ கட்சியில் சேர்ந்த எம்பிக்கள் மூன்று பேர் புறக்கணித்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கலீலூர் ரஹ்மான், அபு தாஹிர் கான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து எம்பி அபு தாஹிர் கான் கூறுகையில், “நாங்கள் என்.டி.ஏ கூட்டணியிலோ அல்லது பாஜகவிலோ இணையவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் ஆதரிக்க மாட்டோம்” என்று தெளிவுபடுத்தினார்.
