பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய லாலு பிரசாத்,‘‘தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி வாக்குத்திருட்டில் ஈடுபடுகின்றன. இத்தகைய முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. வாக்குத்திருட்டுக்கு எதிராக டெல்லியில் இந்தியா கூட்டணி நடத்திய பேரணி வெற்றிகரமாக அமைந்தது” என்றார்.
+
Advertisement


