பீகார் சட்டமன்றத் தேர்தல் : 200 தொகுதிகளை நோக்கி என்டிஏ கூட்டணி.. 5வது முறையாக ஆட்சியமைக்கும் நிதிஷ் குமார் கட்சி
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது. பீகார் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. பீகார் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதை தொடர்ந்து மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் 190 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதில் என்.டி.ஏ கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியு 80 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மகாபந்தன் கூட்டணி 49 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் ஆர்ஜேடி 35 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. தே சமயத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சி எந்த ஒரு இடத்திலும் முன்னிலை பெறவில்லை.
