வக்பு வாரிய தலைவராக நவாஸ் கனி எம்.பி.பொறுப்பேற்பு
சென்னை: வக்பு வாரிய தலைவராக நவாஸ் கனி எம்.பி.பதவியேற்றார். தமிழ்நாடு அரசு, THE UMEED ACT, 1995 (மத்திய சட்டம் 43/1995), பிரிவு 14ன்படி, அரசாணை G.O. (2D) No.97 பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 28.11.2025ல், தமிழ்நாடு வக்பு வாரியத்தை அமைத்தது. அரசாணையின்படி இன்று வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் K நவாஸ்கனி, எம்.பி. தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராகவும் P அப்துல் சமத், MLA, குலாம் முஹம்மது மெஹ்தி கான், A.மஹரிபா பர்வீன், A.S.பாத்திமா முஜப்பர், M.முகம்மது பஷீர் மற்றும் S.K.நவாஸ் ஆகியோர் உறுப்பினர்களாகவும், பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு செயலாளர், E.சரவணவேல்ராஜ், அஃப்தாப் ரசூல், வாரிய முதன்மை செயல் அலுவலர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.