Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

கடற்படையில் பிளஸ் 2 படித்தவர்களுக்கு மாலுமி பணி

ந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மாலுமி பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: செய்லர்ஸ் (எஸ்எஸ்ஆர் மெடிக்கல் பிராஞ்ச்) 02/2027.

சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.

வயது: 01.05.2005க்கும் 31.10.2009க்கும் இடைப்பட்ட தேதியில்

பிறந்திருக்க வேண்டும். ( 2 தேதிகள் உள்பட).

தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அடங்கிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடற்படையால் ஆன்லைனில் நடத்தப்படும் இந்திய கடற்படை நுழைவுத் தேர்வு (Indian Navy Entrance Test) மற்றும் உடற்தகுதி, உடற்திறன் தேர்வுகள், மருத்துவத் தகுதி தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இந்திய கடற்படை நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும். முதல்கட்டத் தேர்வு மே 2026ல் நடைபெறும். 2ம் கட்ட தேர்வு மார்ச் 2027ல் நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவு பாடங்களிலிருந்து ‘ஆப்ஜக்டிவ் டைப்’ கேள்விகள் கேட்கப்படும்.

உயரம்: குறைந்தபட்சம் 157 செ.மீ., இருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு: 1.6 கி.மீ., தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 20 ஸ்குவாட்ஸ், 15 புஷ்அப்ஸ், 15 சிட்அப்ஸ் எடுக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு மற்றும் இதர தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள ‘சில்கா’ கடற்படை பயிற்சி மையத்தில் மே 2027 முதல் பயிற்சி வழங்கப்படும். அப்போது உதவித்தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.550 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.04.2026