Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலோர காவல் படையில் குரூப் ‘சி’ பணியிடங்கள்

கடலோர காவல்படையில் காலியாக உள்ள குரூப் ‘சி’ பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்

1. ஸ்டோர் கீப்பர் கிரேடு-2 : 1 இடம். வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. இன்ஜின் டிரைவர்: 3 இடங்கள். வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் டிரைவர் பணிக்கான சான்றிதழ் பெற்றவராகவும், 2 வருடம் பணி அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

3. லஸ்கர்: 2 இடங்கள். வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. சிவிலியன் மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் (ஆர்டினரி கிரேடு): 3 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பியூன் (ஜெஸ்ட்னர் ஆபரேட்டர்): 4 இடங்கள். வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. வெல்டர் (செமி ஸ்கில்டு): 1 இடம். வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.12.2025.