* தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சருமத்தை ஈரப்பதமாக வைத்து இயற்கையான பொலிவை தரும்.
* காலையில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
* கற்றாழை ஜெல் முகத்தில் தடவுவது முகப்பரு மற்றும் கருமையை குறைக்க உதவும்.
* வாரத்திற்கு இரண்டு முறை கடலைமாவு, தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் பூசினால் சருமம் மென்மையாகும்.
* வெள்ளரிக்காய் சாறு முகத்தில் தடவுவது சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
* தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசுவது இயற்கையான மாய்ஸ்ச்சரைசராக செயல்படும்.
* ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது முகத்திற்கு புத்துணர்ச்சி தரும்.
* தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவது முகத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும்.
* பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகமாக சாப்பிடுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* தேங்காய் எண்ணெயால் முகம் மற்றும் முடிக்கு மசாஜ் செய்வது உலர்ச்சியை குறைக்கும்.
* பப்பாளி பழத்தை முகத்தில் தடவுவது Dead Skin செல்களை அகற்றி சருமத்தை பிரகாசமாக்கும்.
* கண்களின் மேல் குளிர்ந்த டீ பேக் அல்லது வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்தால் கருவளையம் குறையும்.
* தினமும் யோகா அல்லது தியானம் செய்வது மனஅழுத்தத்தை குறைத்து முகத்தில் இயற்கையான ஒளியை தரும்.
* அதிக ரசாயனங்கள் உள்ள காஸ்மெட்டிக்ஸ் தவிர்த்து இயற்கை பொருட்களை பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும்.
* சூரிய வெப்பத்தில் செல்லும்போது சன்ஸ்கிரீன்பயன்படுத்துவது கருமை மற்றும் சரும சேதத்தைத் தடுக்க உதவும்.


