Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயற்கை அழகு!

வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எளிய முறையில் சரும அழகை மேம்படுத்தலாம்.

1. தக்காளி ஜூஸ் 2 ஸ்பூன் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவினால் முகம் பளிச்சிடும்.

2. வெந்தயத்தை இலேசாக சூடாக்கி மிக்ஸியில் அரைத்து (4 தேக்கரண்டி அளவு) வெந்நீரில் ஊறவைக்கவும். நன்கு ஊறிய பிறகு, அதனுடன் ¼ கப் தயிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊறிய பிறகு அலசலாம். பொடுகு உடனே நீங்கும்.

3. காபி பவுடர் நல்ல ஸ்ட்ராங்கான காபி டிகாக்‌ஷனை முடியில் படுமாறு தடவி 10 நிமிடங்கள் ஊறிய பிறகு அலசினால், முடி கறுப்பாகவும், மினு மினுப்பாகவும் தோற்றமளிக்கும்.

4. ஒரு உருளைக்கிழங்கை பச்சையாக துருவி சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 2 டீஸ்பூன் டிகாக்‌ஷனை கலந்து வைத்துக் கொள்ளவும். சுத்தமான பஞ்சை அதில் நனைத்து கண்களின் மீது வைத்துப் பாருங்கள். கருவளையம் இருக்குமிடம் தெரியாமல் மறையும்.

5. தேன் சிறந்த மருந்து மட்டுமல்ல. ஒரு சிறந்த அழகு சாதனப் பொருளும் கூட. தேனை முகத்தில், முடியில் படாமல் தடவுங்கள். இது நல்ல மாய்ஸ்சரைஸர். 20 நிமிடங்கள் ஊறிய பிறகு இளஞ்சூடான நீரினால் முகத்தை கழுவலாம். இரண்டு-மூன்று வயது குறைந்தது போல தோற்றமளிக்கும் உங்கள் சருமம்.

6. ஐஸ் வாட்டர், ஐஸ் க்யூப், முகத்தில் தினமும் 5 நிமிடங்கள் தடவினால்,முக சுருக்கங்கள் இறுகும். மேலும் சரும துளைகளும் சுருங்கி இளமைத்தோற்றம் பெறலாம். இது பல ஹாலிவுட் நடிகைகளின் அழகு ரகசியம்.

- கவிதா பாலாஜிகணேஷ்